அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளையின் சார்பாக கடந்த 10.04.2010 அன்று க...

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளையின் சார்பாக கடந்த 10.04.2010 அன்று காலை 10 மணியளவில் முத்துபேட்டை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் மாவட்ட அளவிலான தர்பியா முகாம் நடைபெற்றது.இதை மாவட்ட தலைவர் A.அன்சாரி அவர்கள் துவங்கிவைத்தார்.முதல் அமர்வில் மாநிலத் துணை தலைவர் M.I.சுலைமான் அவர்கள் தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இரண்டாவது அமர்வில் சஹோதரர் மக்ஹ்லி அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ..மூன்றாவது உரையாக சஹோதரர் கோவை அல்தாப் ஹுசைன் அவர்கள் குர் ஆன்,ஹதீஸை அடிபடையில் நடக்கும் ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் உரையாற்றினார். மாலை 6:00 மணியளவில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தர்பியா முடிவடைந்தது.(அல்ஹம்துலில்லாஹ்)இந்த தர்பியா முகாமில் மாற்று மதத்தை சார்ந்த இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர் 
