தமிழக அரசின் சார்பதிவாளர், வணிக வரித்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான, 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை...
தமிழக அரசின் சார்பதிவாளர், வணிக வரித்துறை ஆணையர் உள்ளிட்ட
பதவிகளுக்கான, 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான
அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு, செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக
தேர்வு நடத்தி குரூப் 2 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, முதல் நிலை தேர்வு டிசம்பர் 1-ந்தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை பார்க்க
தகவல் : அபு ஆசிம்.


