ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இன்டர்ந...
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட், ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மக்கள் மனநிலையை பாதிக்கிறது என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் சாக்லர் ஃபேகல்ட்டி ஆஃப் மெடிசின் அன்ட் தி ஷால்வடா மென்ட்டல் ஹெல்த் கேர் சென்டரின் டாக்டர் யூரி நிட்சன் தெரிவித்துள்ளார்.
கணினியில் மணிக்கணக்கில் செலவு செய்யும் மகனோ, மகளோ இருக்கின்றனரா? அப்படி எனில் உங்கள் குழந்தைகள் படிப்பிற்காக அதிகம் மெனக்கெடுகின்றனர் என்று பெருமை பட்டுக்கொள்ளவேண்டாம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்கானிக்க வேண்டும். அவர்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப், என சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியிருக்கக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதன்காரணமாகவே 'சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று ஒரு புது ரகத்தினர் இன்றைக்கு மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அணுகத் தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும் 'சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில் கவனம் சிதறும் பல மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் 500க்கும் மேற்பட்ட நண்பர்கள் வரை இருக்கின்றனர். 'படிக்கிறேன்' என்ற போர்வையில் தினமும் 3-4 மணி நேரம் வரை சமூக வலைத்தளத்தில் மூழ்குவது, நண்பர்களுடன் சாட்டிங் என படிப்பை பாழாக்கிக் கொள்கின்றனர்.
இது போன்ற செயல்களில் உங்கள் குழந்தைகள் மனநலம் பாதிக்க கூடாது என்றால் அவர்களை அதிலிருந்து விடுக்கும் விதமாகவும், இந்த கோடையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாணவர்களின் விடுமுறையை அமைத்திட தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பல கிளைகளில் கோடை கால பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. தங்கள் குழந்தைகளை அனுப்பிவைத்து மார்க்க கல்வியை கற்க உதவுங்கள்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். (அல்குர்ஆன் 31: 17)