தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.10.2012 ஞாயிற்றுகிழமை மாலை 4.30 மனியளவில் அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராக...
தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.10.2012 ஞாயிற்றுகிழமை மாலை 4.30 மனியளவில் அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் ஒருங்கினைப்பு கூட்டம் நடை பெற்றது. அதில் தொடர்ந்து நடந்த பென்கள் பயானில் சொல்லப்பட்ட விசயங்கள் குறித்த தேர்வு நடத்தப்பட்டது நிகழ்ச்சியின் ஆரம்பமாக அனைவருக்கும் கேள்விதாள் வழங்கப்பட்டது.
பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதுவது போல அனைத்து பெண்களும் ஆர்வமாக வினாத்தாளில் விடை எழுதினார்கள் . இந்த பேப்பர்கள் அனைத்தும் திருத்தப்பட்டு அதிக மதிப்பன் எடுத்தவர்களுக்கு மெகா பரிசுகளும் குரைந்த மதிப்பென் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் 29.10.2012 அன்று கொய்யா மஹாலில் நடக்கும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
இது குறித்து கருத்து தெறிவித்த பெண்கள் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இதன் மூலம் மார்க்கத்தை தெளிவாக விளங்கி கொண்டதே மிகப்பெரிய பரிசு என கூறி சென்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

