திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 15 தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துப்பேட்டை முழுவதும் மழைநீரும், கழிவு நீரும் குடிநீர...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 15 தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துப்பேட்டை முழுவதும் மழைநீரும், கழிவு நீரும் குடிநீரில் கலந்து பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கடுமையான வாந்தி பேதிக்கு ஆளாகி 07-12-2010, 08-12-2010 ஆகிய இருதினங்களாக அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்ததுதான் இதற்கு காரணம் என்றும் இன்னும் தொட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது என்றும் மருத்துவருகள் கூறுகின்றனர். பேரூராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துரையும் பொற்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் தந்து மக்களை காப்பாற்றுமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.