மாநாடு முடித்துவிட்டு துளசியாப்படினம் வேன் வீடுதிரும்பும் போது மன்னார்குடி அருகே உள்ள கருவகுளத்தில் துளசியாப்படினம் வேன் டிரைவர் கண் அயர...



மாநாடு முடித்துவிட்டு துளசியாப்படினம் வேன் வீடுதிரும்பும் போது மன்னார்குடி அருகே உள்ள கருவகுளத்தில் துளசியாப்படினம் வேன் டிரைவர் கண் அயர்ந்ததால் வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதில் முனாப் என்பவர் மரணம் அடைந்தார்.ஜனாசாவை மன்னார்குடி மருத்துவமனையில் பெற்று துளசியாப்படினம் அனுப்பிவைக்கப்பட்டது.
1நபர்க்கு படுகாயம், 3 நபர்களுக்கு சிறுகாயம் ஏற்ப்பட்டு தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர் இச் சம்பவம் அறிந்த உடனே மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
படுகாயம் அடைந்த பகுருதீன் அவர்கள் 09.07.2010 அன்று காலை 08.00 மணிக்கு தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் (மருத்துவமனையில் இரவு 03.00 மணிக்கு கிழே விழந்ததால்) மரணம் அடைந்தார்.இச் சம்பவம் அறிந்த உடனே மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று ஜனாசாவை வாங்கும் போது மருத்துவமனையில் 04.30 வரை ஜனாசாவை தராததால் தலைமை மருத்துவரை அனுகினோம்.அவரும் நாளை என்று சொன்னதால் சுமார் 06.00 மணிக்கு தலைமை மருத்துவர் வீட்டிற்க்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பத்திரிக்கையாளரை சந்தித்து எங்களுக்கு அனீதிஇளைத்ததை கூறினோம். இதனை தொடர்ந்து மீடியா துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது ஜெயா மற்றும் சன் நியூஸ் உடனே முக்கிய செய்தியாக போடப்பட்டபிறகு சுமார் 08.00 மணிக்கு தலைமை மருத்துவர் உடனே போஸ்ட்மாடம் செய்துதருகிறோம் என்று கூறினார்.இரவு 12.00 மணிக்கு ஜனாசாவை பெற்று முத்துப்பேட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.காலை 10.00 மணிக்கு முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர்களுக்காக இறைவனிடம் து ஆ செய்யவும்.

