தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நேற்ற...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நேற்று (07-03-2010 ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணியிலிருந்து ஆரம்பமாகி மாலை 6:00 மணி வரை நீடித்தது அல்லாஹ்வின் பேரருளால் தர்பியா நிகழ்ச்சியை மதரஸா ஆயிஷாவின் (பொதக்குடி)ஆலிமாக்களும், மதரஸா ஆயிஷாவின் பெரிய மாணவிகளும் மிகச்சிறப்பாக தொழுகைப் பயிற்சி, ஜனாஸா விளக்கம், ஹஜ் செய்முறை விளக்கம்,மேலும் இடையிடையே கேள்விகேட்டு பரிசு கொடுத்து நிகழ்ச்சியை மிக மிகச்சிறப்பாக நடத்தித் தந்தனர் இத்தர்பியா முகாமில் 463 பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ( அரங்கத்தின் இரண்டு பகுதிகளிலும் பெண்கள் நிரம்பியிருந்தனர்.)மாவட்டத்தில் தண்ணீர் குன்னம் , மன்னார்குடி,கூத்தாநல்லூர் , கிளைகளிலிருந்து பெண்கள் வருகை தந்து சிறப்பித்தனர். இறுதியில் வருகை தந்திருந்த அனைத்துப் பெண்களுக்கும் மனனம் செய்வோம் என்ற புக் வழங்கப்பட்டது.முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு தலைவராக கிளைத்தலைவர் சகோ PM அக்பர் அலி அவர்களும், முன்னிலையாக தம்மாம் (சவூதி) கிளைத்தலைவர் சகோ முஹம்மத் அலி அவர்களும்,சகோ ஷுஜாவுத்தீன் அவர்களும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக சகோ அப்துல் ஹமீத் மஹ்லரி ஆகியோரும் செயல்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. தர்பியாவை சிறப்பாக்கித்தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே! புகழனைத்தும்!!