முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 28-01-2010 வியாழன் இரவு 7.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் சிவக்குமார் தனது கோஷ்டியுடன் ...
முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 28-01-2010 வியாழன் இரவு 7.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் சிவக்குமார் தனது கோஷ்டியுடன் சென்று, “என் கார் மீது கல் விழுந்தது… கல் வீசியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென் றால் மிகப் பெரும் கலவரம் நடக்கும்…” என்று காவல் துறை ஆய்வாளரை மிரட்டி எஃப்.ஐ.ஆர். போட்டு முஸ்லிம்களை கைது செய் என்றார்.
இரவு 10.30 மணியளவில் முத்துப்பேட்டையின் ஒரு பிரிவான பேட்டை என்ற பகுதியில் முஸ்லிம்கள் மிகவும் குறைவாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் முஸ்லிம்கள் வசிக்கும் தெருவில் ஒரு மரத்தைப் போட்டு, “துலுக்கனுங்க எவனும் இங்கே வரக் கூடாது…” என்று சிவக்குமார் தன் கோஷ்டியுடன் நின்று மிரட்டிக் கொண்டிருந்தார்.அந்நேரத்தில் முஸ்லிம் பெண்களை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோவை உள்ளே விட மாட்டோம் என்று கூறி தகராறு செய்திருக்கிறார்கள்.
அந்த ஆட்டோ டிரைவர் எப்படியோ சமாளித்து ஏற்றி வந்தவர்களை விட்டு விட்டு சென்று விட்டார். இச்செய்தி உடனே டிஎன்டிஜே நகரச் செயலாளர் சாதிக் கவனத்திற்கு வந்தவுடன், அவர் டிஎஸ்பி கவனத்திற்கு கொண்டு சென்றார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற டி.எஸ்.பி., சாதிக்கை தொடர்பு கொண்டு ஒரு ஆள் குடித்து விட்டு பேசியதாகவும், பின்னர் அவர் சென்று விட்டதாகவும், தற்போது பிரச்சினை எதுவும் இல்லை; நார்மலாக உள்ளது என்றும் கூறிவிட்டார்.
இரவு 11.30 மணி, மாவட்டத் தலைவர் அன்சாரியிடமிருந்து சாதிக்கிற்கு போன் வந்தது. அரபு சாகிப் பள்ளி வாசல் இருந்து வந்த தகவல் பேட்டையில் முஸ்லிம்களை வீடுகளில் புகுந்து அடிப்பதற்கு பாஜக குண்டர்கள் திரண்டு விட்டார்கள்.
“உடனே நீங்க போலீஸ் முழுவதையும் ஸ்பாட்டுக்கு போகச் சொல்லுங்க… என்று கூற, சாதிக் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஸ்பாட்டுக்குப் போக இடையில் ஏடிஎஸ்பி மறைத்துக் கொண்டு, “சாதிக், நிலைமை நார்மலா இருக்கு… என்கிட்டயும் நிறைய போர்ஸ் இல்லை. உங்க ஆளுங்களை அமைதியா இருக்கச் சொல்லுங்க…” என்று கூற, உடனே சாதிக் எஸ்.பி.யைத் தொடர்பு கொண்டார்.
எஸ்.பி., தான் திருச்சியில் இருப்பதாக வும், சுற்று வட்டாரத்தில் உள்ள போலீஸ் போர்ஸை உடனே இறக்குகிறேன் என்று கூறி அமைதி காக்கக் கோரினார்.
இந்நிலையில் பாஜக குண்டர்கள் சிவா தலைமையில் பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் ஒருவரின் ஆட்டோவையும், துளசியாப் பட்டிணத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு காரையும் அடித்து நொறுக்கினர். இதைக் கண்ட முஸ்லிம்கள் செய்வதறியாது திகைத்திருக்க, மங்களூர், செம்படவன்நாடு பகுதியைச் சேர்ந்த பாஜக குண்டர்கள் அல் மனார் ஆட்டோ ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் கடையை கொளுத்தி விட்டுச் சென்றனர்.
பட்டுக்கோட்டை ரோட்டில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. பொருளாதார இழப்புகளையும், செய்யாத குற்றத்திற்காக வழக்குகளையும், சிறைத் தண்டனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இச்சமுதாயம் நாளை இந்த ஆட்சியாளர்களால், அரசு இயந்திரங்களால் என்ன பாடுபடப் போகிறதோ என்று மாவட்டத் தலைவர் அன்சாரி எஸ்.பி.யிடம் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டிருந்தார்.
“அன்சாரி, நேர்மையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்…” என போலீசால் பேசப்படும் வசனத்தை ஒருமுறை ஞாப கப்படுத்தினார் எஸ்.பி! அடுத்த நாள் காலை முத்துப்பேட்டை போலீஸ் மாயமானது. முஸ்லிம்கள் மீது மூன்று வழக்கும், பாஜகவினர் மீது மூன்று வழக்கும் பதிவு செய்தனர் காவல் துறையினர்.
இந்நிலையில் கடந்த 31-01-2010 அன்று திருவாரூரில் டிஎன்டிஜேயினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து முத்துப்பேட்டை நிலைமையை விளக்கினர். 01-02-2010 திங்கள் அன்று அனைத்து சமூகத்தினருடன் சமாதானப் பேச்சு வார்த்தை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடைபெற்றது இந்த சந்திப்பில் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் அளித்த பேட்டி பத்திரிக்கைகளில் வெளியானது: கலவரப் பின்னணி என்ன?கடந்த வாரம் தாவூது என்ற சிறு வியாபாரி பிஸ்கட், மிட்டாய் போன்றவற்றை சிறு கடைகளுக்கு போடுவார். பேட்டை பகுதிக்கு வியாபாரம் விஷயமாக போனபோது சிவக்குமார் தனது பாஜக குண்டர்களுடன் தாவூதை வம்புக்கு இழுத்து அடித்துள்ளனர். தாவூது, நாம் யாரிடமாவது இதுகுறித்து சொன்னால் பிரச்சினை ஆகி விட்டால் நாம் இப்பகுதியில் வியாபாரம் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். உடல் உள்ள காயத்தை உறவினர்கள் பார்த்து விட்டு போலீசில் புகார் செய்ய, இது குறித்து விசாரிப்போம் என்று கூறி போலீஸ் அவரை அனுப்பி விட்டது.
இந்த விசாரணையை திசை திருப்ப நடத்தப்பட்டதுதான் இந்த கல் வீச்சு நாடகம். அன்றே போலீஸ் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இக்கலவரம் தடுக்கப்பட்டிருக்கும். ஹஜ் பெருநாள் தினத்தன்று முஸ்லிம் களின் இரு நிறுவனங்கள் கொய்யா மசாலா, அல் மாஷா டிரஸ்ட் இவை இரண்டும் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டது. எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு 3 மாதம்வரை ஒருவரையும் கைது செய்யவில்லை. பின்னர் டிஎன்டிஜே காவல் துறை முற்றுகை போராட்டத்தைக் கையில் எடுத்தவுடன் 3 நபரை கைது செய்திருக்கிறது காவல் துறை. அல் மாஷா டிரஸ்ட் புகார் விஷயமாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வெகுஜன ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை”
பொதுவாக இதுபோன்ற மோதல்கள் இரு பிரிவினரிடையே ஏற்படும்போது ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஆகிய செய்தி ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
உள்ள சில தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் இச்செய்தியை ஊதிப் பெரிதாக்கும் நோக்கத்திலேயே செய்திகளை வெளியிட்டன, இது மேலும் பகை உணர்வைத்தான் இருபிரிவினரிடையே ஏற்படுத்தும். சில ஊடகங்கள் இரு பிரிவினரிடையே மோதல் என்பதோடு நிறுத்திக் கொண்டன. மக்கள் தொலைக்காட்சியானது இந்து – முஸ்லிம் கலவரம் என்றே செய்தி சொல்யது.
தினமலரானது ஒருபடி மேலே போய் இந்துக்களுக்கு மட்டுமே சேதம் என்றும் முஸ்லிம் அமைப்பு ஒன்றை பெயர் குறிப்பிட்டும் குற்றம் சாட்டி எழுதியது. இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் எழுதுவதையும் செய்தி வாசிப்பதையும் ஊடகங்கள் தவிர்த்துக் கொள்வது அவைகளின் முக்கிய கடமையாகும். இல்லையேல் அரசாங்கமானது இதுபோன்ற செய்தி ஊடகங்களுக்கும் தணிக்கை முறை கொண்டுவரும் நிலை ஏற்படலாம்.
விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில்…
அண்ணன் தம்பிகளாக உறவுமுறை பாராட்டி அமைதியாக வாழ்ந்து வந்த முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலங்கள் நடைபெற துவங்கிய பிறகுதான் மத நல்ணக்கம் சீர்குலைந்தது. இந்த ஊர்வலத்தில் மதவெறியை விதைத்து, கலவரம் மற்றும் வன்முறைகளை உண்டாக்கி, வெறியாட்டம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை காவல்துறை கட்டுப்படுத்தாதவரை இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.