ஏர்வாடி தர்ஹாவின் வாரிசு உரிமை மோதலால், மனக்குறைக்கு மருந்து தேடி அங்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்! ராமநாதபுர...
ஏர்வாடி தர்ஹாவின் வாரிசு உரிமை மோதலால், மனக்குறைக்கு மருந்து தேடி அங்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஒலியுல்லா என்ற மகானின் அடக்கத் தலம் உள்ளது. பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த இடத்துக்கு வந்து போனாலே... நலம் அடைவதாக நம்பிக்கை நிலவுகிறது.
அப்படி நம்பிக்கை உள்ளவர்கள், தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து ஏராளமாக இங்கு வந்து, தங்கி இருந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். 1744-ம் ஆண்டிலிருந்து இந்த தர்ஹாவை முஜாவிர் நல்ல இபுராஹிம் என் பவரும் அவரது வழி வந்த வாரிசுகளும்தான் நிர்வகித்து வருகிறார்கள். இப்போது தர்ஹாவை நிர்வகிக்கும் வாரிசுதாரர்களின் எண்ணிக்கை 250-ஐ தாண்டி நிற்கிறது. 'இவர்களில் யாருக்கு அதிக உரிமை இருக்கிறது?' என்ற பிரச்னை கார ணமாகத்தான், தர்ஹாவின் முக்கிய இடமான மக்பாரா அறைக்கு மாற்றி மாற்றிப் பூட்டுப் போட்டுவிட... ஏர்வாடிக்கு வரும் நம் பிக்கையாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்!
மக்பாரா அறைக்கு பூட்டு போட்ட சோட்டை செய்யது இபுராஹிம் லெப்பையை சந்தித்தோம். ''மக்பாரா அறையில் உள்ள அடக்கத் தலத்தில் போர்வை போர்த்தி
கிரிகை வழிபாட்டினை எங்கள் முன்னோர்கள் ஆரம்ப காலம் முதல் செய்து வந்தனர். கடைசியாக எனது தந்தை செய்யது அபுதாஹீர் செய்து வந்தார். இருந்தும், தர்ஹா நிர்வாகத்தினரிடையே பணிகள் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 89-ம் ஆண்டில் நீதிமன்றத்தின் மூலம் தர்ஹா நிர்வாகிகளுக்கான பணிகள் வரையறுக்கப்பட்டது. இதில் எனது தந்தைக்கு வழக்கம்போல் போர்வை போர்த்தும் கிரிகை பணி ஒதுக்கப்பட்டது. எனது தந்தை மறைவுக்குப் பின் நான் அந்தப் பணியை செய்து வந்தேன். நிர்வாகத்தினர் அதில் தலையிட உரிமை இல்லாததால், ஹக்தர்கள் (வாரிசுகள்) சிலரை தூண்டிவிட்டு பிரச்னை செய்தனர். இது தொடர்பாக 2004-ல் நீதிமன்றம் சென்றேன். அப்போது தர்ஹா நிர் வாகத்தினர், 'இடையூறு செய்ய மாட்டோம்...' என எழுதிக் கொடுத்ததால் வழக்கை வாபஸ் வாங்கினேன். அதன்பிறகு பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், 2008-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவின்போது என்னிடம் பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், விழா முடிந்ததும் சாவியை திருப்பி ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டு என்னிடமிருந்த மக்பாரா அறை சாவியை வாங்கினார்.
நாகராஜன் அப்படிச் செய்யாமல் தர்ஹா நிர்வாகத்திடம் சாவியைக் கொடுத்ததால், மதுரை ஹைகோர்ட்டில் அவர் மீது வழக்கு போட்டேன். அப்போது, கோர்ட் உத்தரவுப்படி மீண்டும் சாவி என் கைக்கு வந்தது. ஆனால், சாவியையும் என்னிடம் கொடுத்துவிட்டு வேறொரு பூட்டையும் போட்டு மக்பாரா அறையை பூட்டி விட்டது நிர்வாகம். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். கடந்த பிப்ரவரி முதல் தேதி தீர்ப்பு சொல்லப்பட்ட அந்த வழக்கில், நான் புதிய பூட்டு போட்டுக் கொள்ளவும், அதனை போலீஸார் கண்காணிப்பு செய்யவும் உத்தரவானது. இதை ஆட்சேபித்து தர்ஹா நிர்வாகம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், தர்ஹா உரிமை குறித்து சிவில் கோர்ட்டில் முடிவு செய்து கொள்ளும்படி சொல்லிவிட்டது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி மக்பாரா அறைக்கு நான் புதிதாகப் பூட்டுப் போட்டேன். அதற்கு மறுநாளே தர்ஹா நிர்வாகத்திலிருந்து அதற்கு மேல் இன்னும் இரண்டு பூட்டுகளைப் போட்டு மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு செய்திருக்கிறார்கள்!'' என்றார்.
தர்ஹா நிர்வாக தலைவர் முகம்மது அமீர்ஹம்சா நம்மிடம், ''வழக்கமா மக்பாரா அறையின் சாவியை நிர்வாகத்துக்கு நம்பிக்கையான நபரிடம்தான் ஒப்படைப்போம். 95-ல் நான் தலைவராக வந்தேன். எனக்கு நம்பகமாக இருந்த செய்யது அபுதாஹீரிடம் சாவியைக் கொடுத்திருந்தேன். எனக்கு பிறகு வந்தவர்களும் அவரிடமே கொடுத்து வந்தனர். அபுதாஹீர் இறந்ததும் அவரது மகன் இபுராஹிம் அந்த சாவியை வைத்துக்கொண்டு மக்பாரா அறையை தனது பூர்வீக சொத்து போல பயன்படுத்த நினைக்கிறார். விழா சமயத்தில் நிர்வாகத்தினர் வழங்கும் அடையாள அட்டையில் தனது பெயருக்கு கீழ், தான் மட்டுமே வாரிசு என்பது போல பிரின்ட் செய்து பக்தர்களிடம் வசூலில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக பிரச்னை வரவும்தான் வாரிசுதாரர்கள் எல்லோரும் சேர்ந்து வேறு பூட்டுப் போட்டார்கள்.
தொடர்ந்து போலீஸார் சமாதானம் செய்து சாவியை எங்களிடம் கொடுத்தனர். இதனால், இபுராஹிம் கோர்ட்டில் கேஸ் போட்டாரு. நாங்களும் சாவியை கொடுத்தோம். ஆனா, அந்த சாவி சேரலைன்னு மீண்டும் கோர்ட்டுக்குப் போனார். இப்ப, கோர்ட் உத்தரவுப்படி கமிட்டி போட்ட பூட்டை எடுத்துட்டு தானே வேறு பூட்டு போட்டுருக்கார். இதைப் பார்த்து வேறு சில வாரிசுதாரர்களும் பூட்டுப் போட்டுருக் காங்க. இதனால் மக்பாரா அறையின் முன்பு நின்று, பக்தர்கள் போர்வை செலுத்தி பிரார்த்தனை செய்ய மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் பொதுக்குழு கூடி இது தொடர்பாக நல்ல முடிவு எடுப்போம்...'' என்றார்.
இந்தக் குழப்பங்கள் குறித்து நம்மிடம் பேசிய அம்ஜத் உசேன் என்பவர், ''பெருத்த நம்பிக்கை வைத்து இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். இந்தப் பிரச்னைகளால் அவர்களின் வழிபாட்டு உரிமை பறிக் கப்பட்டிருக்கு. தர்ஹா நிர்வாகம் சரிவரக் கணக்கு வழக்குக் காட்டாமல் இருப்பதால், உண்மையில் எந்த நோக்கத்துக்காக ராமநாதபுரம் ராஜா இந்த இடத்தை வழங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, அரசு ஏர்வாடி தர்ஹா நிர்வாகத்தின் செயல் பாடுகளை கண்காணிப்பு செய்யணும்!'' என்றார்.
-
தகவல் - ஜூனியர் விகடன்
தர்காஹ்வில் உள்ள அவ்லியாவுக்கு தன்னுடைய சொந்த தர்காஹ்வையே காப்பாற்ற முடியவில்லையா? அப்போ கப்ருகளை வணங்கும் மக்களை அந்த அவ்லியா எப்படி அய்யா காப்பாற்றுவார்?
தன்னுடைய சொந்த கப்ருக்கு தன்னடைய கராமத் மூலமாக பூட்டபட்டுவதை தடுக்க சக்தி பெறாதவர் குழந்தை வரம் வேண்டி வருபவருக்கு எவ்வாறு வரம் கொடுப்பார்? புத்தி சுவாதினம் இல்லாத மக்களை எவ்வாறு குணப்படுத்துவார்?
உயிருடன் உள்ளவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்தால் தட்டிக்கேட்கலாம் இறந்தோரது கப்ரை பூட்டி சீல் வைத்தால் தட்டிக்கேட்க முடியுமா?
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
(அல்குர்ஆன் 35:22)
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது!
(அல்குர்ஆன் 27:80)
இப்போதாவது நம் சமுதாய மக்களில் இணை வைப்பவர்கள் அனைத்து தர்காஹ்களையும் பூஜித்து வணங்குவதை நிறுத்துவார்களா? அல்லாஹ்வின் வார்த்தைகளான அல்குர்ஆனை விளங்கமாட்டார்களா?
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!