தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையின் சார்பில் மாபெரும் குடியரசு தின இரத்ததான முகாம் மற்றும் சர்க்கரை நோய் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையின் சார்பில் மாபெரும் குடியரசு தின இரத்ததான முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் TNTJ மர்கஸில் நேற்று 26-01-2010 செவ்வாய்கிழமை காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை நடைபெற்றது.
இம்முகாம் TNTJ யின் மாநில செயலாளர் சகோ தவ்பீக் அவர்கள் தலைமையிலும்,சகோ நயினா முஹம்மத் ( TNTJ மாவட்ட துணை செயலாளர்) சகோ ஹாஜா மைதீன் (TNTJ மாவட்ட பொருளாளர் ) மற்றும் ஒருங்கிணைந்த கிளைகளின் தலைவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இரத்ததான முகாமை கூத்தாநல்லூர் நகராட்சி தலைவி,மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் துவங்கி வைத்தார்கள்.
இந்நிககழ்ச்சியில் அனைத்து கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
அல்லாஹ்வின் பேரருளால் 65 நபர்கள் தங்களின் உதிரத்தை கொடையாக வழங்கினார்கள். அல்ஹம்து லில்லாஹ்!
இதற்குமேலும் இரத்தம் எடுக்க முடியாது என்று இரத்த வங்கியாளர்கள் உறுதியாக கூறிவிட்டதால் இரத்தம் கொடுக்க வந்த சிலர்கள் இரத்தம் கொடுக்க முடியாமல் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றார்கள்