கல்வி உதவி தொகை போன்ற அரசு துறைகளில் முதலில் கேட்பது....சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதல்களை தான். இதற்காக பல இடங்களுகக்கு அழைந்த...
கல்வி உதவி தொகை போன்ற அரசு துறைகளில் முதலில் கேட்பது....சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதல்களை தான்.
இதற்காக பல இடங்களுகக்கு அழைந்து விதிந்து, பாடுபட்டு எடுக்கும் அவலநிலையை போக்க தமிழகஅரசு தற்போது ஆன்லைன் மூலம் பெறும் வசதியை செய்துள்ளது.
சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்:
தமிழ்நாடில் இப்பொழுது "e-District" ஆகி விட்டது.
இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல், வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.
இது ஒரு கணினிமயமாக்கப்பட்ட சான்றிதழ்கள், இதில் அரசாங்க முத்திரை இருக்காது. ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதழ்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்று கொள்ளப்படும்.
இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் கண்ட இணைய முகவரிக்குச் சென்று "Register Citizen" என்பதை கிளிக் செய்து உங்களுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அல்லது) பாஸ்போர்ட் எண் (அல்லது) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழு விபரமும் ரிஜிஸ்டர் ஆகி விடும்.
பின்னர் உங்களுக்கு தேவையான சான்றிதல்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும்) மிகவும் மேலும் பிற்படுத்தப்பட்டோர்க்கான கல்வி உதவித்தொகை கிடைக்க வழி செய்யப்படும்.
பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் வழி வகை உண்டு.
குறிப்பு : இதில் பல தகவல்கள் கேள்விகலாக உள்ளது. கவணமாக பதிவு செய்யவும்.

