திருவாரூரில் வரும் 20-ம் தேதி தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு. திருஞ...
திருவாரூரில் வரும் 20-ம் தேதி தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்
நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு. திருஞானசம்பந்தம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 20-ம் தேதி
பிற்பகல் 2.30 மணிக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு
முகாம் நடைபெறவுள்ளது.
பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல்
பட்டதாரிகள் உள்பட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து
காத்திருக்கும் அனைவரும் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செக்யூரிட்டி கார்டு, எஸ்.பி.ஐ
இன்சூரன்ஸ் முகவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழகத்திலுள்ள
தொழில் நிறுவனங்கள் தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளன.
இவ்வாறு தனியார் துறைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு
அலுவலக பதிவுமூப்பு நீக்கம் செய்யப்படாமல் தொடர்ந்து பராமரிக்கப்படும்.
எனவே மாவட்டத்தில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆண்கள்
மற்றும் பெண்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தங்கள் சுயவிவர
நகல்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயன்பெறலாம்.
தகவல் ஹாசிக்கின் -கொடிநகர்.

