இன்று 21-9-2013 நடைபெறும் கூத்தாடிகளின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து வரும் வரிபணம் 10 கோடியை தாரை வாத்திருக்கிறார்...
இன்று 21-9-2013 நடைபெறும் கூத்தாடிகளின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து வரும் வரிபணம் 10 கோடியை தாரை வாத்திருக்கிறார் ஜெ.
ஏற்கனவே, தமிழகம் மின் பிரச்சனையால் அல்லாடி கொண்டிருக்கும் இந்த வேலையில், இது போன்ற கூத்தாடி விழாவிற்கு அரசு பணத்தை அக்கரையின்றி செலவிடுகிறது தமிழக அரசு.
இது யாருடைய பணம்? படிப்புக்க வசதியின்றி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத எத்தனையோ கிராமங்களில் உள்ள மக்களுக்கு, அல்லது மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கு, ஒரு நகர, கிராமத்தின் உட்புற கட்டமைப்புக்கு இந்த பணத்தை செலவிட்டு இருக்கலாம்.
சினிமாவில் இருப்பவர்களுக்கு பணத்திற்கு என்ன பிரச்சனை? சினிமாவின் மூலம் கோடிகள் சம்பாதித்தவர்கள், சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள், இருக்கையில் பொதுமக்களின் பணத்தில் விழா நடத்துவதன் அவசியம் என்ன?
மக்களின் வரிப் பணத்தை, ஏதோ சிலரின் கேளிக்கைக்காக அரசு இப்படி வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம். பொதுவாக படங்களால் சமுதாயமே சீரழிந்துகொண்டு இருக்கும் இந்த நிலையில் அதற்கு ஊக்கமருந்து கொடுக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கதக்கது.
பள்ளி ஆசிரியர்கள் முதல், கல்லூரி மாணவர்கள் வரை எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்று சட்டம் போடும் தமிழக அரசு, சினிமாத்துறையை ஊக்கபடுத்துவது எதிர்மறையானது.
படங்கள்தான் இந்த கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக காரணமாக இருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற செயல்பாடுகள் மூலம் பொதுமக்கள் அதிர்ப்தி அடையவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.


