சமீபத்தில் ஜனவரி 6 அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துலே என்னுமிடத்தில் நடந்த கலவரம் குறித்து ஹிந்து பத்திரிக்கையில் வெளியான செய்தி: இ...
சமீபத்தில் ஜனவரி 6 அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துலே என்னுமிடத்தில் நடந்த கலவரம் குறித்து ஹிந்து பத்திரிக்கையில் வெளியான செய்தி: இந்த கலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழு விசாரித்து தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தி ஹிந்து செய்தி
http://www.thehindu.com/news/states/other-states/factfinding-team-alleges-deliberate-targeting-of-muslims-in-dhule/article4320438.ece?homepage=true#.UPo75MbPNW8.email
கருத்தாக்கம்
திட்டமிட்டு குறிவைத்து தாக்கப்பட்ட துலே முஸ்லீம்கள் – உண்மையை கண்டறியும் குழுவின் குற்றச்சாட்டு அறிக்கை
ஜனவரி 6 அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துலே என்னுமிடத்தில் நடந்த ஒரு கலவரத்தில், முஸ்லீம்களை காவல் துறையினர் குறி வைத்து தாக்கியதன் உண்மையை கண்டறிய சில சமூக ஆர்வலர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர் . இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் முஸ்லீம்கள்.
ஒரு உணவுக் கடை உரிமையாளருக்கும், ரிக்ஷாகாரருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆரம்பித்து ஹிந்து முஸ்லீம் கோஷ்டி மோதலாக வெடித்து கை கலப்பு முதல் கல் வீச்சு வரை சென்றுள்ளது. காவல் துறையினர் வேடிக்கை பார்க்க , சுமார் 35 முஸ்லிம்களின் குடும்பங்களின் வீடுகளில் இருந்த பொருட்களை சூறைஆடிவிட்டு அவ்வீடுகளுக்கு தீ மூட்டி கறித்துள்ளனர் இந்த கொடும்பாவிகள் .
இது அனைத்தும் நடந்து அறங்கேறியது மனிதநேயமற்ற காவல்துறையின் கண்களுக்கு முன்னால் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. காப்பாற்றவில்லை என்றாலும் கூட பரவாயில்லை , ஆனால் இந்த காவல் துறையினரும் இந்து கலவரகாரகளுடன் சேர்ந்து தங்கள் பங்காக முஸ்லிம்களை கண்மூடி தனமாக சுட்டு தள்ளி உள்ளனர் என்று சமூக ஆர்வலர்களின் உண்மையை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த ஷப்னம் ஹாஷிமி , பேராசிரியர் ராம் புனியானி , மற்றும் அபூர்வானந் நடந்த சம்பவத்தை ஆய்வு செய்து டில்லியில் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் .
அந்த தகவல் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “காவல் துறையினர், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த வித அறிவிப்போ ,தடியடியோ அல்லது கண்ணீர் புகை குண்டு வீசுவதோ போன்ற எந்த ஒரு முயற்சியையும் செய்யாமல், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது. அனைத்து தோட்டாக்களும் முட்டிக்கு மேல், வயிறு, மார்பு, கழுத்து, முதுகு மற்றும் முகம் போன்ற பகுதிகளில் சுடப்பட்டுள்ளன” ,அதே சமயம் இந்து மக்கள் தரப்பில் வெறும் நான்கு வீடுகள் மட்டுமே சேதபட்டன.
அரசு தரப்பில், “காவல் துறையினர் , தங்களது தற்காப்புகாகவே துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்றும், இந்த மோதலின் போது கொடூர இராசயனங்களால் காவல் துறையினரை தாக்கியதாகவும், இதில் 159 காவல் துறையினர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் “18 காவல்துறையினர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதித்திருந்ததும், மேலும் இவர்களுக்கு பெரிய விதமான எந்த தாக்குதலுக்கும் இவர்கள் உள்ளாகவில்லை” என்று உண்மையை கண்டறியும் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த உண்மையை கண்டறியும் குழுவின் தகவல் அறிக்கை படி, “அதிகப்படியான காவல்துறையினர் துலே முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்குன்டான பொதுவான சட்ட திட்டங்களை தவறவிட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “துலே பகுதியின் கலெக்டர் மற்றும் உதவி துணை ஆணையர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்யக்கோரியும், அப்பாவி மக்களை கொன்று சொத்துக்களை நாசமாக காரணமான காவல்துறையினரை விசாரிப்பது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது, காயத்திற்குள்ளாக்கியது, போன்ற வழக்குகளுக்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதியுமாரும், குற்றவாளிகள் அல்லாதவர்களுக்கு நிதியுதவி மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிக்குமாறும்” அந்த சமூக ஆர்வளர்களின் உண்மை கண்டறியும் குழுவின் தகவல் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.
அதே போன்று thatstamil நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தி :
பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் காவி தீவிரவாதத்தை பரப்புவதற்காக தீவிரவாத முகாம்களை நடத்துவதாக தெரிய வந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே குற்றம் சாட்டினார். இந்த கருத்துக்கு ஆதரவாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
ஷிண்டே உள்துறை அமைச்சர். ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?. ஷிண்டே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது உயர் சாதிவர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும். அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும். சுசில்குமார் ஷிண்டே காவி தீவிரவாதம் குறித்து கூறியதில் தவறு என்ன? ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். (முழுமையான செய்தி).
தீவிர வாதத்தை வளர்ப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்றே அனைத்து ஊடகங்களும் கூறிவறும் நிலையில், முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் கமல் போன்ற எந்த கூத்தாடிகள் இந்து தீவிரவாத அமைப்புகளை பற்றி படம் எடுக்க நோன்றவில்லையே.(?). க(ா)மல் விஸ்வரூபத்தை கைவிட வேண்டும். மத்திய மற்றும் தமிழக அரசு இப்படத்தை உடனடியாக தடை செய்து உத்தரவிட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு. செய்யுமா ? இரண்டு அரசுகளும்.
Update News
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தொடர்பு:
நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 10 பேருக்குத் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங கூறியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா மற்றும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையின்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 10 பேருக்கு இச்சம்பவங்களில் தொடர்புள்ளதாகத் தெரியவந்தது.
இவர்களுக்கும், அந்த வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்றார் சிங்.
சமீபத்தில்தான் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே,நாட்டில் தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதாகவும், காவி தீவிரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். பார்க்க
மற்றும் ஒன்று...
சிவசேனா தலைவர் பால்தாக்கரே பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி அந்த விழாவில் பங்கேற்க வரும் பெண்களுக்கு கத்தி வழங்க சிவசேனா கட்சியினர் முடிவு செய்துள்ளனர். முழுமையான செய்தி பார்க்க


