திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பில் கடந்த 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பவியல் பெண்கள் தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற...
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பில் கடந்த 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பவியல் பெண்கள் தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் வெல்கம்சிட்டி மண்டபத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 10.30 ஆரம்பம் ஆனது இதில் இறையச்சம் என்ற தலைப்பிலும் , குழந்தை வளர்ப்பு , கணவன் மனைவி உறவு, பெற்றோகள், முதியவர்கள் போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
இதனை அந் நூர் மதரசா மாணவிகள் சிறப்பாக நடத்தி கொடுத்தனர். வருகை தந்த அனைவர்க்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எதிர்பார்த்ததை விடவும் 400 பெண்களுக்கு மேல் வந்து இருந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சி பெண்களை கொண்டே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கும் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

.jpg)
