திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் மாணவ-மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் பள்ளிவாசலில் துவங...
திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் மாணவ-மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் பள்ளிவாசலில் துவங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் பயின்று வருகின்றனர். இதில் மாணவரணியினர் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர்.
இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடைபெற்று வருகிறது.
இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களை ஹதிஸ் ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு மாவட்ட பேச்சாளர் பருஜ், ஹாசிக்கின் அவர்களும் பயிற்சியளிக்கிறார்.
மாணவர்கள் அதிகமாக இருப்பதால் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டு கிளை பேச்சாளர் சகோ பைசல் பாமின் இர்ஷாத் மன்சூர் ஆகியோர் சிறுவர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர். இன்ஷா அல்லாஹ்.. 15-05-13 வரை பயிற்சி முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



