கடந்த நவம்பர் 28ம் தேதி நடைபெற இருந்த திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு தொடர் மழையின் காரணமாக...
கடந்த நவம்பர் 28ம் தேதி நடைபெற இருந்த திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு தொடர் மழையின் காரணமாக நேற்றைய தேதிக்கு (12-12-2010) தேதிக்கு. அதன் பின்னரும் நிலைமை முழுமையாக சீரடையாமல் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்ததுடன் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால் எதிர்பார்த்தது போல் மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது.மேலும் திருவிடைச்சேரி கிராமத்தில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்று தெரிந்திருந்தும் தவ்ஹீத் ஜமா அத்தை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த 19 இயக்கங்கள் படாதபாடு பட்டன. ஊர் ஊராக ஆளுயர சுவரொட்டிகளை ஒட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் மீது கொலைப்பழியைச் சுமத்தி மாவட்டத்தில் உள்ள ஊர்கள் தோறும் சென்று தூண்டி விட்டார்கள்.தமுமுகவும், பாலியல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்ட பாக்கர் கும்பலும், பல வேடம் போடும் விடியல் வெள்ளி கும்பலும் இதற்கு முன்னிலை வகித்தனர். திருவிடைச்சேரி சம்பவம் காரணமாக திருவாரூர் மாவட்ட மக்கள் மாநாட்டுக்கு வர மாட்டார்கள் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு மாநாடு தோல்வியடையும் என்று காத்துக் கிடந்தனர்.மேலும் ஹஜ் பெருநாளை 18ம் தேதி கொண்டாடியதால் முஸ்லிம் சமுதாயம் தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறுப்பில் இருப்பதாகவும் கதை கட்டி மகிழ்ந்திருந்தனர்.அவர்களது எண்ணத்திலும் எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போடும் விதமாக திருவிடைச்சேரி அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாநாடு நடந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்டது.மற்ற இயக்கத்தினர் நடத்தும் மாநில மாநாடுகளை மிஞ்சும் வகையில் இந்த மாவட்ட மாநாடு மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரி சம அளவில் பங்கு கொண்டனர். மேடையில் இருந்து பார்க்கும் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்களின் தலைகளே காட்சியளித்தன. அல்ஹம்துலில்லாஹ்!மாநாட்டின் கடைசியை மேடையில் இருந்து காண முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருவாரூர் இப்படியொரு மக்கள் வெள்ளத்தை இதற்கு முன் கண்டிருக்குமா என்பது சந்தேகமே. மாநாட்டு திடலின் நீளம் 600 மீட்டர் ஆகும். அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை மக்கள் நிரப்பிக் காட்டி நாட்டில் முஸ்லிம்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒரே அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தான் என்பதை அல்லாஹ் நிரூபித்துக் காட்டினான். அல்ஹம்துலில்லாஹ்மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் கடும் உழைப்பை இந்த மக்கள் கூட்டம் மெய்ப்பித்தது. மாவட்ட துணைத் தலைவர் வெங்கலம் அப்துல் காதர் தலைமையில் முதல் அமர்வு மாலை 5.00 மணிக்குத் தொடங்கியது. முதல் அமர்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பேச்சாளர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துடைய கொள்கை கோட் பாடுகள் குறித்து சிற்றுரைகள் ஆற்றினார்கள்.இரண்டாம் அமர்வு மாலை 5.15 மணிக்கு மாவட்டத் தலைவர் அன்சாரி தலைமையில் தொடங்கியது. தலைமை உரைக்குப் பின் மாநிலப் பொருளாளர் முஹம்மது சாதிக் திருவாரூரில் தற்பொழுது காவல்துறை செய்துவரும் அட்டூழி யங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் சட்டத்திற்குட்பட்டு தமிழகமெங்கும் எவ்வாறு அமைதியாக நடைபெற்று வருகின்றது என்பதையும் விளக்கி அமைதி காக்கும் கூட்டத்தை வீணாக வம்புக்கிழுத்து விபரீத விளைவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கண்காணிப்பாளர் மூர்த்திக்கு எச்சரிக்கை செய்தார்.சென்னை மாநகரிலும் மற்ற மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் செயல்பாடுகளை அறிந்து ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றார்கள் என்பதையும் திருவாரூர் மாவட்ட காவல் துறை மட்டும் தேவையில்லாமல் அநீதி இழைத்து வருகின்றது என்பதையும் விளக்கிக் கூறினார். அடுத்து மாநிலப் பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளுடன் போட்டி போட முடியாமலும் 19 ஜமாஅத்துகள் என்ற பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி எத்தனை அவதூறு சுவரொட்டிகள் ஒட்டி செயல்பட்டாலும் மக்கள் இவர்களது சுய ரூபத்தை அறிந்து தெளிவாக இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துக் காட்டிய கூட்டம்தான் இந்த மாநாட்டு வெள்ளம் என்று உதாரணங்களுடன் விளக்கினார்.மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி ஜனவரி 27ம் நாள் நடைபெற இருக்கின்ற பேரணி மற்றும் போராட்டம் ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதுவரை வழங்கப் பட்ட தீர்ப்புகள் கடந்த 30-09-2010ம் நாள் பாபர் மசூதி வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை, அதில் கூறப்பட்ட மத நம்பிக்கையான சான்றுகள் நீதிபதிகளின் சட்ட விரோதமான சிந்தனை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் ராமர் பிறந்தார் என்ப தற்கு சான்றாக எடுத்துவைத்த அறிவியலாளர்களின் சான்றுகள் ஆகியவைகளை மிகத் தெளிவாக விளக்கினார்.முஸ்லிம்களுக்குச் சொந்தமான இறையில்லத்தை பங்கு போட்ட அநீதிக்கு எதிராகவும் உரிமையை மறுத்து மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்தும் உச்ச நீதிமன்றமே தானாக இவ்வழக்கை எடுத்து விசாரித்து உரிய தீர்ப்பை வழங்குமாறு கோரியும் இன்ஷா அல்லாஹ் ஜனவரில் 27ம் நாள் பேரணியுடன் கூடிய போரட்டம் நடைபெற இருப்பதாக விளக்கினார். தமிழகத்தில் உயர் நீதிமன்றங்கள் உள்ள சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் இப்போரட்டத்திற்கு வருவீர்களா என மக்களை நோக்கிக் கேட்டபோது அல்லாஹ் அக்பர் என்ற கோஷத்துடன் தங்கள் கைகளை உயர்த்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.நிறுவனரும் மேலாண்மைக் குழு உறுப்பினருமான பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் நிரைவுரையாற்றினார்.தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தீவிரவாதக் கருத்துகளை அடியோடு ஒழித்து மக்களை இறை நம்பிக்கையின்பால் அழைத்து வருவதை விளக்கினார். ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை செயலாற்றி வருவதை காரண காரியங்களுடன் விளக்கினார். இதற்கு முன் தோன்றிய இயக்கங்களின் சுயலாபக் கொள்கைகள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராகக் கூடியிருக்கும் இந்தக் கூட்டணிகளின் சுயரூபங்களை விளக்கி அவாகளின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார்.தற்பொழுது திருவாரூர் மாவட்ட காவல்துறை திருவிடைச் சேரியில் ஒருதலைப்பட்சமாக நடந்து, தவறு செய்தவர்களை கைது செய்யாமல் சம்பந்தமில்லாத தவ்ஹீத் சகோதரர்களின் மேல் பொய் வழக்குப் போட்டு அநீதி இழைத்து வருவதை விளக்கினார். மேலும் தவ்ஹீத் சகோதரானின் வீட்டை அநியாயமாக உடைத்து நாசப்படுத்தியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி நிற்பதாகக் கூறினார். இதே போக்கு தொடருமேயானால் தவ்ஹீத் ஜமாஅத் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று எச்சரித்தார்.இறுதியாக மாவட்ட பொருளாளர் காஜா முஹைதீன் தீர் மானங்கள் வாசித்து மக்களின் ஒப்புதலைப் பெற்றபின் கூட்டம் நிறைவு பெற்றது. பல மாதங்களுக்குப் பின் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் அரிய பல கருத்துகளைக் கேட்ட திருப்தியுடன் மக்கள் கலைந்து சென்றனர்