சுகாதார சீர்கேட்டை சரிசெய்யாத முத்துப்பேட்டை நகர பேரூரட்சியை கண்டித்து 10-10-2010 வெள்ளி மாலை 4.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நட...
சுகாதார சீர்கேட்டை சரிசெய்யாத முத்துப்பேட்டை நகர பேரூரட்சியை கண்டித்து 10-10-2010 வெள்ளி மாலை 4.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் பேரூராட்சியின் கையாளாகாத தனத்தை பட்டியலிட்டார். மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்களுக்காக எதையும் செய்ய தயங்காது என்பதை எச்சரித்தார். மாவட்ட தலைவர் அன்சாரி இது தொடக்கம் தான் இது சரிசெய்யப்படாவிட்டால் இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று கூறினார். நகர தலைவர் நஜிபுதீன் இது சரிசெய்ய்ப்படாவிட்டால் மாவட்ட மாநாட்டிற்கு பிறகு தலைமையின் ஆலோசனையின்படி பேரூராட்சி முற்றுகையிடப்படும் என்று தக்பீர் முழக்கங்களுக்கிடையே முழங்கினார். இறுதியாக நகர செயலாளர் M.R.S. சேக்காதி நன்றியுரையாற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.