ஆபாசம் மற்றும் தீவிரவாத செயல்களை தூண்டுகிற வகையில் எழுத்து விபச்சாரம் செய்து காசு சம்பாரிக்கும் நக்கீரன் கோபாலின் விஷமதனத்தை கண்டித்து 04/10...
ஆபாசம் மற்றும் தீவிரவாத செயல்களை தூண்டுகிற வகையில் எழுத்து விபச்சாரம் செய்து காசு சம்பாரிக்கும் நக்கீரன் கோபாலின் விஷமதனத்தை கண்டித்து 04/10/2010 திங்கள் அன்று காலை 11.00 மணியளவில் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்களின் வீரியமிக்க கோஷமும் கண்டன உரையும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். மேலான்மைகுழு உறுப்பினர் அப்துல் ரஹீம், மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் நக்கீரன் இதழை ஒரு சிலர் எரிக்க முற்பட்டபோது உடனே மாவட்ட நிர்வாகிகள் தடுத்து நிறுத்திவிட்டனர் .இதழை எரிக்க முற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய வந்தனர். வாக்குறுதி மீறி எரிக்க முன்வந்தது தவறுதான் என்று மாவட்ட நிர்வாகிகள் சொல்லியும் கண்டுக்கொள்ளாமல் காவல்துறையினர் கைது செய்ய வந்தனர். இதையரிந்துக்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்த பொதுமக்கள் திரும்பவும் ஆர்ப்பட்டக்களத்தில் குழும்பி கைதுசெய்வதாக இருந்தால் எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் என்று குரலிட்டனர். நமது ஜமாத் உடைய ஒற்றுமையையும், வீரியத்தையும் கண்ட காவல்துறையினர், உங்கள் யாரையும் கைது செய்யவில்லை நீங்கள் அனைவரும் அமைதியாக களைந்துச் செல்லுங்கள் என்று கூறினர். நமது ஜமாஅத் உடைய உண்மை நிலையாலும், அல்லாஹ்வுடைய தனிப்பட்ட அருளாலும் நமக்கு கிடைத்த வெற்றி என்று அனைவரும் கலைந்துச் சென்றனர்.