பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாபர் மசூதி கமிட்டியிடம், ராமர் கோவில் கமிட்டியிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி...
பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாபர் மசூதி கமிட்டியிடம், ராமர் கோவில் கமிட்டியிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் வழங்க வேண்டும் என்றும்,
ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும்,
நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கியுள்ளனர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து இந்து மகா சபா, நிர்மோலி அகரா மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளனர்.
பாபர் மஸ்ஜித் இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளர்.
மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு ஆங்கிலத்தில்..
Sudhir Agarwal.pdf
Sibghat Ullah Khan.pdf
Dharam Veer Sharma-1.pdf
Dharam Veer Sharma-1.pdf
குறிப்பு: இது தீர்ப்பு என்ன உள்ளது என்பது பற்றிய செய்தி மட்டுமே . தீர்ப்பு பற்றிய நமது நிலைபாடோ அல்லது அது பற்றிய விளக்மோ அல்ல!