அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டப்பொதுக்குழு ...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டப்பொதுக்குழு மாநில துணைத்தலைவர் சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையிலும் திருவாரூர் மாவட்ட வளைகுடா பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையிலும் 01-08-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10:௦௦00 மணிமுதல் மதியம் 3:00 மணிவரை நடைபெற்றது. நிர்வாகசீரமைப்பு, மாநில மாவட்ட நிர்வாகத்தின் மீது கூறப்படும் குற்றாச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தல், மற்றும் எதிர்காலத்திட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளும், மாநில துணைத்தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் மிகச்சிறப்பான முறையில் விளக்கியதைத்தொடர்ந்து கிளை நிர்வாகிகள் புத்துணர்வு பெற்று ஆக்கப்பூர்வமான பணிகளை இன்னும் வீரியத்துடன் செய்திட களைந்து சென்றனர்.
குறிப்பு: மாவட்ட நிர்வாகிகளின் வேலைப்பளுவை குறைக்கவும் செயல் திட்டங்களை அதிகப்படுத்திடவும் பொதுக்குழு உறுப்பினர்களின் முழு அங்கீகாரத்தோடு மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதலாக இரண்டு துணை செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ( திருவாரூர் பக்ருத்தீன், கொடிக்கால்பாளையம் இல்யாஸ் )

