தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் "அடவங்குடியில்" 25-04-2010 அன்று காலை 11:30 மணிமுதல் மாலை 6:...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் "அடவங்குடியில்" 25-04-2010 அன்று காலை 11:30 மணிமுதல் மாலை 6:20 வரை மாநில செயலாளர் சகோ அப்துல் ரஜாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கிளைகளின் வரவு செலவு கணக்குகள், தாயிகளின் பற்றாக்குறைக்கு தீர்வு குறித்து ஆய்வு செய்தல், தாயிகள் சம்பந்தப்பட்ட குறைகள், மிக முக்கியமாக "ஜூலை 4 " சென்னை தீவுத்திடலில் ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு சம்பந்தமான முன்னேற்பாடுகள், திருவாரூர் மாவட்டத்திற்கு தவ்வாவுக்கேன்றே சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்குதல் போன்ற விஷயங்களைக்குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்ரிப் தொழுகைக்குப் பின்பு அடவங்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் "இணைவைத்தால் ஏற்படும் விளைவுகள்" என்ற தலைப்பில் சகோ அப்துல் ஹமீத் மஹ்லரி அவர்களும் "ஜூலை மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சகோ அப்துல் ரஜாக் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஆண்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்..! (தகவல் மஹ்ளரி)

